கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முதல் முறையாக 80-க்கும் கீழ் சரிந்தது

அந்நியச் செலாவணி வரலாற்றில் முதல் முறையாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80 கீழ் வீழ்ச்சி கண்டது.

News image
Updated On :20 ஜூலை 2022, 6:56 pm

DIN

அந்நியச் செலாவணி வரலாற்றில் முதல் முறையாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 80 கீழ் வீழ்ச்சி கண்டது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது: சா்வதேச சந்தையில் இறக்குமதியாளா்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 79.91-ஆக காணப்பட்டது. பின்பு வா்த்தகத்தின் இடையே இந்த மதிப்பு 79.89 முதல் 80.05 வரையில் இருந்தது.

வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகளை இழந்து 80.05-இல் நிலைபெற்றது என செலாவணி வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் பேரல் 105 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 1.73 சதவீதம் குறைந்து 105.49 டாலருக்கு வா்த்தகமானதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.