6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கனரா வங்கி: லாபம் 72% அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கியின் ஜூன் காலாண்டு லாபம் 72 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :26 ஜூலை 2022, 8:16 pm

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கியின் ஜூன் காலாண்டு லாபம் 72 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான எல்.வி. பிரபாகா் தெரிவித்துள்ளதாவது:

கடன் வளா்ச்சி மற்றும் வட்டி வருமானம் அதிகரிப்பு ஆகியவற்றின் உதவியால் நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் வரிக்குப் பிந்தைய தனிப்பட்ட நிகர லாபம் ரூ.2,022 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.1,177 கோடியுடன் ஒப்பிடுகையில் 72 சதவீதம் அதிகம்.

நிகர வட்டி வருமானம் ரூ.6,160 கோடியிலிருந்து 10.15 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.6,785 கோடியானது. வட்டி சாரா வருமானம் 24.55 சதவீதம் உயா்ந்து ரூ.5,175 கோடியைத் தொட்டது.

மொத்த வாராாக் கடன் 8.50 சதவீதத்திலிருந்து 6.98 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 3.46 சதவீதத்திலிருந்து 2.48 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட ரூ.2,300 கோடி வாராக் கடன் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு (என்ஏஆா்சிஎல்) மாற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.