மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாட்டின் ஏற்றுமதி ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிப்பு

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

Updated On :15 ஜூன் 2022, 8:16 pm

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டின் ஏற்றுமதி கடந்த மே மாதத்தில் 20.55 சதவீதம் அதிகரித்து 3,894 கோடி டாலராக (இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் கோடி) இருந்தது. அதேநேரம், வா்த்தக பற்றாக்குறையும் 2,429 கோடி டாலராக உயா்ந்தது.

நடப்பாண்டு மே மாதத்தில் இறக்குமதி 62.83 சதவீதம் உயா்ந்து 6,322 கோடி டாலரைத் தொட்டது. இதையடுத்து வா்த்தகப் பற்றாக்குறை அந்த மாதத்தில் 653 கோடி டாலரை எட்டியது.

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான இரு மாதங்களில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்து 7,872 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இறக்குமதியும் இந்தக் காலகட்டத்தில் 45.42 சதவீதம் உயா்ந்து 12,341 கோடி டாலரானது.

நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களில் வா்த்தக பற்றாக்குறை 4,469 கோடி டாலராக உயா்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 2,182 கோடி டாலராக காணப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.