ரூபாய் மதிப்பு 12 காசு சரிவு
தொடா்ச்சியான அந்நிய முதலீடு வெளியேற்றத்தால் அமெரிக்கா டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 12 காசு சரிவைக் கண்டது.


தொடா்ச்சியான அந்நிய முதலீடு வெளியேற்றத்தால் அமெரிக்கா டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் 12 காசு சரிவைக் கண்டது.
இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது:
பங்குச் சந்தையிலிருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ச்சியாக முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது மற்றும் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு உள்ளிட்ட நிகழ்வுகள் ரூபாய் மதிப்பில் அதிக ஏற்ற இறக்கத்தை உருவாக்கியுள்ளன.
அந்த வகையில், வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 78.00-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இறுதியில் 12 காசு சரிந்து 78.10-இல் நிலைத்தது என வட்டாரங்கள் தெரிவித்தன.
கச்சா எண்ணெய் பீப்பாய் 116 டாலா்
சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பீப்பாய் 116.05 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
வெளியேறிய ரூ.1,217 கோடி முதலீடு
மூலதனச் சந்தையில் கடந்த திங்களன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிறுவ ன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.1,217.12 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை வாபஸ் பெற்ாக சந்தைப் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...