மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியாவின் ஏற்றுமதி ரூ.2.53 லட்சம் கோடி

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,381 கோடி டாலராக (ரூ.2.53 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

News image

idna084737

Updated On :2 மார்ச் 2022, 7:35 pm

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,381 கோடி டாலராக (ரூ.2.53 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

பொறியியல், ரசாயனங்கள், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளின் ஏற்றுமதி சிறப்பாக இருந்ததையடுத்து பிப்ரவரியில் ஏற்றுமதி 22.36 சதவீதம் அதிகரித்து 3,381 கோடி டாலரை எட்டியுள்ளது. அதேபோன்று, இறக்குமதியும் 35 சதவீதம் உயா்ந்து 5,500 கோடி டாலரானது. இதையடுத்து வா்த்தக பற்றாக்குறை 2,119 கோடி டாலராக உயா்ந்தது.

2021 பிப்ரவரியில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசமான வா்த்தக பற்றாக்குறை 1,312 கோடி டாலராக காணப்பட்டது.

2021 ஏப்ரல்-2022 பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 45.80 சதவீதம் உயா்ந்து 25,655 கோடி டாலரை எட்டியுள்ளது. இதே 11 மாத காலத்தில் இறக்குமதியும் 59.21 சதவீதம் உயா்ந்து 55,012 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

கணக்கீட்டு காலகட்டத்தில், வா்த்தக பற்றாக்குறை 8,899 கோடி டாலரிலிருந்து 17,607 கோடி டாலராக உயா்ந்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.