இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

லாபப் பதிவால் சென்செக்ஸ் 304 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச் சந்தையில் ஐடி, ஆட்டோ, வங்கி, நிதி நிறுவனப் பங்குகளில் புதன்கிழமை லாபப் பதிவு இருந்தது. இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 304 புள்ளிகளை இழந்தது.

News image
Updated On :24 மார்ச் 2022, 9:21 am

தினமணி

பங்குச் சந்தையில் ஐடி, ஆட்டோ, வங்கி, நிதி நிறுவனப் பங்குகளில் புதன்கிழமை லாபப் பதிவு இருந்தது. இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 304 புள்ளிகளை இழந்தது.
 அதிகரிக்கும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் கடந்த இரண்டு நாள்களாக உள்நாட்டுப் பங்குச் சந்தை ஒரு வரம்பில் சிக்கித் தவித்தது. காலையில் உற்சாகத்துடன் தொடங்கினாலும், பங்குகள் வாங்குதல் அளவு பெரிய அளவில் காணப்படவில்லை.
 இந்த நிலையில், வர்த்தகத்தின் இரண்டாம் பாதியில் கீழ்நோக்கிய அழுத்தத்திற்கு வழிவகுத்தது. குறிப்பாக வங்கி, நிதி நிறுவனங்கள், ஐடி துறை பங்குகளில் லாபப் பதிவு தொடர்ந்ததால், சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 பணவீக்க அழுத்தம்: சமீபத்திய எழுச்சிக்குப் பிறகு சந்தையில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர். பணவீக்கம் அழுத்தம் காரணமாக சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்துள்ளது. மேலும், உலகில் சில பகுதிகளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதும் சந்தையில் நிலையற்ற தன்மைக்கு வழி வகுத்துள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 1,986 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,525 நிறுவனப் பங்குகளில் 1,986 பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தன.1,417 பங்குகள் ஆதாயம் பெற்றன. 122 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 126 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 30 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு வர்த்தக முடிவில் ரூ.260.05 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.06 கோடியாக உயர்ந்தது.
 சென்செக்ஸ் காலையில் 209.34 புள்ளிகள் கூடுதலுடன் 58,198.64-இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,416.56 வரை உயர்ந்தது. பின்னர், லாபப் பதிவு காரணமாக 57,568.59 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 304.48 புள்ளிகள் (0.53 சதவீதம்) குறைந்து 57,684.82-இல் நிலைபெற்றது. பெரும்பாலான நேரம் சந்தை கரடியின் ஆதிக்கத்தில் இருந்தது.
 எச்டிஎஃப்சி சரிவு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் விலை வீழ்ச்சி கண்டன.
 கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த எச்டிஎஃப்சி 2.36 சதவீதம் மற்றும் கோட்டக் பேங்க் 2.25 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பார்தி ஏர்டெல், மாருதி சுஸýகி, சன்பார்மா, எம் அண்ட் எம், எச்டிஎஃப்சி பேங்க், ஏஷியன் பெயிண்ட் உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவமான இன்ஃபோசிஸ், டைட்டன், ஹெச்யுஎல், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 டாக்டர் ரெட்டீஸ் லேப் முன்னேற்றம்: அதே சமயம், பிரபல பார்மா நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேப் 2.31 சதவீதம், டாடா ஸ்டீல் 2.15 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஐடிசி, பவர் கிரிட், என்டிபிசி, இன்டஸ்இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா, விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்டவை சிறிதளவு உயர்ந்தன.
 நிஃப்டி 70 புள்ளிகள் சரிவு:
 தேசிய பங்குச் சந்தையில் 764 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,143 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 69.85 புள்ளிகள் (0.40 சதவீதம்) குறைந்து 17,245.65-இல் நிறைவடைந்தது. காலையில் 89.55 புள்ளிகள் கூடுதலுடன் 17,405.05-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,442.40 வரை உயர்ந்தது. பின்னர், 17,199.60 வரை கீழே சென்றது.
 மெட்டல் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மெட்டல் குறியீடு 1.21 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பார்மா, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 0.40 சதவீதம் வரை உயர்ந்தன. அதே சமயம், நிஃப்டி ஆட்டோ குறியீடு 1.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி குறியீடுகள் 0.40 முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.