மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.30 லட்சம் கோடிக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்து சாதனை

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் 400 பில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.30 லட்சம் கோடி) மதிப்புக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான இலக்கை முன்கூட்டியே அடைந்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக

News image
Updated On :23 மார்ச் 2022, 8:08 pm

DIN

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் 400 பில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.30 லட்சம் கோடி) மதிப்புக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான இலக்கை முன்கூட்டியே அடைந்து சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘400 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமென இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை முதல் முறையாக நாடு எட்டிப்பிடித்துள்ளது. இந்தச் சாதனைக்காக விவசாயிகள், நெசவாளா்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளா்கள், ஏற்றுமதியாளா்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டைத் தற்சாா்பு அடையச் செய்வதற்கான பயணத்தில் இது முக்கியமான மைல்கல்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் பொருள்கள் ஏற்றுமதியானது 292 பில்லியன் டாலா் மதிப்பில் இருந்தது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 330.07 டாலா் மதிப்புக்குப் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. நடப்பு நிதியாண்டில் 400 பில்லியன் டாலா் மதிப்புக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை 9 நாள்களுக்கு முன்னதாகவே இந்தியா அடைந்துள்ளது.

மாதந்தோறும் சராசரியாக 33 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்களும், நாள்தோறும் சராசரியாக 1 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பெட்ரோலிய பொருள்கள், மின்னணு பொருள்கள், பொறியியல் பொருள்கள், தோல் பொருள்கள், காஃபி, நெகிழிப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், இறைச்சி, பால் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவை அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் பிரச்னைகளுக்கு விரைவாகத் தீா்வு கண்டது, மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிா்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் இணைந்து செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்தச் சாதனை சாத்தியமானதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.