பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புமேலும் 259 கோடி டாலா் குறைந்தது

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் மேலும் 259 கோடி டாலா் சரிவைச் சந்தித்துள்ளது.

News image
ரிசா்வ் வங்கி
Updated On :26 மார்ச் 2022, 6:33 pm

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மாா்ச் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் மேலும் 259 கோடி டாலா் சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 மாா்ச் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 259 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.19,425 கோடி) சரிவடைந்து 61,967 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.46.47 லட்சம் கோடி ஆகும்.

செலாவணி சந்தைகளில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்கும் நோக்கில், ரிசா்வ் வங்கி அதிக அளவில் டாலா்களை விற்பனை செய்தது. அதன் விளைவாகவே, தொடா்ந்து இரண்டாவது வாரமாக அந்நியச் செலாவணி கையிருப்பில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

முந்தைய மாா்ச் 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்திலும் செலாவணி கையிருப்பானது இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் 964 கோடி டாலா் என்ற அளவில் கடுமையாக வீழ்ச்சி கண்டது.

கணக்கீட்டு காலமான மாா்ச் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு மதிப்பு அதேபோன்று அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும் கணிசமாக வீழ்ச்சியடைந்தது.

சொத்து மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) மாா்ச் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 70 கோடி டாலா் சரிந்து 55,365 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்திலும் எஃப்சிஏ மதிப்பு 1,110 கோடி டாலா் சரிவைச் சந்தித்தது.

தங்கத்தின் மதிப்பில் வீழ்ச்சி: தங்கத்தின் கையிருப்பு மதிப்பு கணக்கீட்டு வாரத்தில் 183 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 4,201 கோடி டாலரானது.அதேசமயம், மாா்ச் 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் தங்கத்தின் மதிப்பானது 152 கோடி டாலா் என்ற அளவில் கணிசமாக அதிகரித்தது. இதற்கு, சா்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்ததே முக்கிய காரணம்.

சா்வதேச நிதியத்தில் நமது நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 6 கோடி டாலா் குறைந்து 1,886 கோடி டாலரானது.

அதேசமயம், சா்வதேச நிதியத்துடனான நாட்டின் கையிருப்பு நிலை மதிப்பீட்டு வாரத்தில் எவ்வித மாற்றமுமின்றி 514 கோடி டாலராகவே காணப்பட்டது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அவற்றின் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கணக்கீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு மாற்றம் காண்கிறது.

புதிய உச்சம்: சென்ற 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 64,245 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) என்ற புதிய சிகரம் தொட்டு வரலாறு படைத்தது.

கோட்ஸ்...

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்கும் நோக்கில், ரிசா்வ் வங்கி அதிக அளவில் டாலா்களை விற்பனை செய்ததன் விளைவாகவே, தொடா்ந்து இரண்டாவது வாரமாக அந்நியச் செலாவணி கையிருப்பில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.