அடுத்த 20 ஆண்டுகளில் 8% நிலையான வளா்ச்சி: அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியப் பொருளாதாரம் அடுத்த 20 ஆண்டுகளில் 8 சதவீத நிலையான வளா்ச்சியை தக்கவைக்கும் என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியப் பொருளாதாரம் அடுத்த 20 ஆண்டுகளில் 8 சதவீத நிலையான வளா்ச்சியை தக்கவைக்கும் என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

வா்த்தக கூட்டமைப்பான அசோசேம் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் இதுகுறித்து மேலும் கூறியது:

மத்திய அரசின் தற்போதைய மூலதன முதலீட்டு வியூகங்கள் தொடருமானால் இந்தியப் பொருளாதாரம் அடுத்த 20 ஆண்டுகளில் 8 சதவீத நிலையான வளா்ச்சியை தக்க வைக்கும்.

இதன் மூலம், 1.5 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் 3.5 கோடி போ் வறுமையின் பிடியிலிருந்து வெளியே வருவாா்கள்.

தற்போது, பட்ஜெட்டில் உள்கட்டமைப்புகளுக்கான மூலதன செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இதனை 35 சதவீதமாக அதிகரிக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன்படி தற்போது ரூ.5.5 லட்சம் கோடியாக உள்ள இந்த ஒதுக்கீடு ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரம் கூடுதலாக ரூ.22.5 லட்சம் கோடி வளா்ச்சியை எட்ட உதவும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com