தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோதுமை கொள்முதல் 44 சதவீதம் சரிவு

நடப்பு ராபி பருவத்தில் கோதுமை கொள்முதல் 44 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 மே 2022, 7:37 pm

DIN

நடப்பு ராபி பருவத்தில் கோதுமை கொள்முதல் 44 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2022-23 ராபி சந்தைப் பருவத்தில் மே 1-ஆம் தேதி வரையில் மத்திய அரசின் கொள்முதல் 44 சதவீதம் குறைந்து 162 லட்சம் டன்னாக சரிந்துள்ளது. இது, முந்தைய காலகட்டத்தில் 288 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.

இந்த கோதுமை கொள்முதலுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.32,633.71 கோடியை வழங்கியதன் மூலம் 14.70 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனா்.

பஞ்சாப், ஹரியாணா மண்டிகளுக்கு வரத்து குறைவு மற்றும் ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாக கோதுமை கொள்முதல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி 2021-22 பயிா் பருவத்தில் (ஜூலை-ஜூன்) கோதுமை உற்பத்தி 111.32 மில்லயன் டன்னை எட்டி சாதனை படைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.