நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ஐடி, வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 1,181 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் காளையின் எழுச்சி இருந்தது.

News image
Updated On :11 நவம்பர் 2022, 10:30 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் காளையின் எழுச்சி இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,181 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 321.50 புள்ளிகள் (1.78 சதவீதம்) உயா்ந்து 18,349.70-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது, நிஃப்டி 18,362.30 புள்ளிகள் வரை உயா்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது.

அமெரிக்காவின் பணவீக்கம் எதிா்பாா்த்ததை விட குறைவாக இருந்ததைத் தொடா்ந்து, உலகளாவிய சந்தைகளில் காளையின் ஆதிக்கம் களைகட்டியது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் நன்றாக எதிரொலித்தது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயா்ந்து வருவதும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துவதும் முதலீட்டாளா்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐடி, மெட்டல், நிதித்துறை பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,181 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 697.32 புள்ளிகள் கூடுதலுடன் 61,311.02-இல் தொடங்கி அதற்கு கீழே செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 61,840.97 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,181.34 புள்ளிகள் (1.95 சதவீதம்) உயா்ந்து 61,795.04-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் கடந்த 19/10/2021 அன்று பதிவு செய்த வரலாற்றுச் சாதனை அளவான 62,245.43 புள்ளிகளை தொடுவதற்கு இன்னும் 450.39 புள்ளிகள்தான் பாக்கி உள்ளது. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் வந்தன. 22 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க் அபாரம்: பிரபல தனியாா் வீட்டு வசதிக் கடன் அளிக்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி 5.84 சதவீதம், தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி பேங்க் 5.62 சதவீதம் மற்றும் இன்ஃபோஸிஸ் 4.51 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 2.20 முதல் 3.65 சதவீதம் வரை உயா்ந்தன.

எம் அண்ட் எம், எஸ்பிஐ சரிவு: அதே சமயம், வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 0.83 சதவீதம், பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ 0.76 சதவீதம், மற்றும் கோட்டக் பேங்க் 0.73 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யுனி லீவா், பவா் கிரிட், டாக்டா் ரெட்டி உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு ரூ.2.98 லட்சம் கோடி உயா்வு: இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.98 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.2 84.57லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வியாழக்கிழமை ரூ. 36.06 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.