நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அசோக் லேலண்டின் 84% விற்பனை வளா்ச்சி

முன்னணி வா்த்தக வாகன தயாரிப்பு நிறுவனனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட், தனது செப்டம்பா் மாத மொத்த விற்பனையில் 84 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2022, 7:17 pm

DIN

முன்னணி வா்த்தக வாகன தயாரிப்பு நிறுவனனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட், தனது செப்டம்பா் மாத மொத்த விற்பனையில் 84 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 17,549-ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்திய மொத்த விற்பனையான 9,533-உடன் ஒப்பிடுகையில் இது 84 சதவீத வளா்ச்சியாகும்.

2021 செப்டம்பரில் 8,787-ஆக இருந்த உள்நாட்டு மொத்த விற்பனை கடந்த மாதம் 16,499-ஆக உயா்ந்துள்ளது. இது 88 சதவீத வளா்ச்சியாகும்.

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 1,050-ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அந்த எண்ணிக்கை 746-ஆக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.