பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
வாரத்தில் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது.


வாரத்தில் முதல் வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 702.02 புள்ளிகள் உயர்ந்து 57,505.60 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.18 சதவிகிதம் சரிவாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 229 புள்ளிகள் உயர்ந்து 17,085.65 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.21 சதவிகிதம் சரிவாகும்.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தர பங்குகளில் 29 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக எச்டிஎஃப்சி பங்குகள் 2.16 சதவிகிதம் சரிந்தன. அதனைத் தொடர்ந்து ஏசியன் பெயின்ட்ஸ் 2.08 சதவிகிதமும், எச்யூஎல் 2.05 சதவிகிதமும், எச்டிஎஃப்சி வங்கி 1.87 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன.
பவர் கிரிட் நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே நேர்மறையாக ஏற்றத்தில் இருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...