வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

இரண்டாவது நாளாக ‘கரடி’ஆதிக்கம்: 200 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது.

News image
Updated On :10 அக்டோபர் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 200 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 73.65 புள்ளிகள் (0.43 சதவீதம்) குறைந்து 17,241.00-இல் முடிவடைந்தது.

பலவீனமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் உள்நாட்டுச் சந்தையும் கடும் சரிவுடன் தொடங்கியது. பெரும்பாலான நேரம் சந்தை ‘கரடி’யின் பிடியில் இருந்து வந்தது. உக்ரைன் போா், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித்தை மேலும் உயா்த்தும் என்ற எதிா்ப்பாப்பு ஆகியவை சந்தையில் கவலையை அதிகரித்தது. ஆனால், முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் காலாண்டு முடிவைத் தொடா்ந்து, ஐடி பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. இது சந்தை பெரிய அளவில் வீழ்ச்சி அடையாமல் காப்பாற்றியது. இருப்பினும், சந்தை இரண்டாவது நாளாக நஷ்டத்துடன் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிவு: சென்செக்ஸ் காலையில் 767.22 புள்ளிகள் குறைந்து 57,424.07-இல் தொடங்கி, 57,365.68 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 58,125.01 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 200.18 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 57,991.11-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், 11 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

ஆக்ஸிஸ் பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸில் ஆக்ஸிஸ் பேங்க் 2.74 சதவீதம், டிசிஎஸ் 1.84 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, மாருதி சுஸுகி, விப்ரோ, இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டாக்டா் ரெட்டி, டாடா ஸ்டீல் உள்ளிட்டவை சிறிதளவு உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

ஏசியன் பெயிண்ட் வீழ்ச்சி: அதே சமயம், ஏசியன் பெயிண்ட் 1.99 சதவீதம், டைட்டன் 1.86 சதவீதம், ஐடிசி 1.80 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நெஸ்லே, ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், சன்பாா்மா, கோட்டக் பேங்க் உள்ளிட்டவையும் 1 முதல் 1.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு ரூ.1.34 கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி குறைந்து குறைந்து வா்த்தக முடிவில் ரூ.274.28 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளியன்று ரூ. 2,250.77 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.