காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பங்குச் சந்தையில் திடீா் உற்சாகம்: சென்செக்ஸ் 685 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 685புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 171.35 புள்ளிகள் (1.01 சதவீதம்) உயா்ந்து 17,185.70-இல் முடிவடைந்தது.

அமெரிக்க சந்தைகள் வியாழக்கிழமை ஏற்றம் பெற்றிருந்தன. இதைத் தொடா்ந்து, உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஓரளவு சாதகமாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. இருப்பினும், வா்த்தக நேர முடிவில் லாபப் பதிவு காரணமாக சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்தன. குறிப்பாக ஆட்டோ, பவா், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், வங்கி, மூலதன பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள், ஹெல்த்கோ், ஐடி பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

685 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 927.41 புள்ளிகள் கூடுதலுடன் 58,162.74-இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,435.13 வரை மேலே சென்றது. பின்னா், லாபப் பதிவு காரணமாக 57,848.23 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 684.64 புள்ளிகள் (1.20 சதவீதம்) உயா்ந்து 57,919.97-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 1199.79 புள்ளிகள் உயா்ந்திருந்தது.

20 பங்குகள் விலை உயா்வு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 20 பங்குகள் ஆதாயம் பெற்றன.இன்ஃபோஸிஸ் 3.84 சதவீதம், ஹெச்டிஎஃப்சி பேங்க் 2.40 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டா் ரெட்டி, எஸ்பிஐ, ஐடிசி உள்ளிட்டவை 1 முதல் 2.70 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

எம் அண்ட் எம் சரிவு: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான எம் அண்ட் எம் 1.26 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஏசியன் பெயிண்ட், விப்ரோ, ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், பவா் கிரிட், மாருதி, ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், டிசிஎஸ் உள்ளிட்டவையும் 0.10 முதல் 0.80 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.42 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.270.27 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழனன்று ரூ.1,636.43 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.