அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம்(செவ்வாய்க்கிழமை) வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 82.36 ஆக இருந்த நிலையில் நேற்று(புதன்கிழமை) காலை 82.30 ஆகக் குறைந்தது.
பின்னர் நேற்று(புதன்கிழமை) வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 83.02 ஆக மேலும் சரிந்து, முதல்முறையாக 83 ரூபாய்க்கும் மேல் சென்றது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பின்னர் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 83.15 ஆகக் குறைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வரலாறு காணாத வீழ்ச்சி இதுவாகும்.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79.87 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க ராகுல் வலியுறுத்தல்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல்!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்!

தவறான முடிவுகளை எடுக்க தூக்கமின்மை காரணமா? | அறிவியல் ஆயிரம்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

