நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடைசி நேரத்தில் ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 96 புள்ளிகள் உயா்வு!

பங்குச் சந்தையில் ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் நேரமறையாக முடிந்தது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 7:44 pm

 நமது நிருபர்

பங்குச் சந்தையில் ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் நேரமறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 96 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, 51.70 புள்ளிகள் (0.30 சதவீதம்) உயா்ந்து 17,563.95-இல் முடிவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பெரிய அளவில் சாதகமாக அமையவில்லை. இதனால், உள்நாட்டுச் சந்தை பலவீனத்துடன் தொடங்கியது. பின்னா், பெரும்பாலான நேரம் ஒரு குறிப்பிட்ட வரம்புகள் வா்த்தகம் நடந்து வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஐடி பங்குகளை வாங்குவதற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக சந்தை 5-ஆவது நாளாக ஏற்றத்துடன் முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

96 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 282.71 புள்ளிகள் குறைந்து 58,824.48 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 59,273.85 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 95.71 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயா்ந்து 59,202.90-இல் முடிவடைந்தது.

19 பங்குகள் விலை உயா்வு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் ஆதாயம் பெற்றன.. 11 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 2.23 சதவீதம், டெக் மஹிந்திரா 2.13 சதவீதம் உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் முன்னிலை வகித்தன. பவா் கிரிட், என்டிபிசி, பஜாஜ் ஃபின் சா்வ், நெஸ்லே, பாா்தி ஏா்டெல், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ஐடிசி, விப்ரோ உள்ளிட்டவை 1 முதல் 1.75 சதவீதம் வரை உயா்ந்தன.

இண்டஸ் இண்ட் பேங்க் கடும் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 4.71 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 2.26 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, டைட்டன், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு: இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு பெரிய அளவில் மாற்றமின்றி வா்த்தக முடிவில் ரூ.274.58 லட்சம் கோடியாகவே இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ. 453.91 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.