காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆறாவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் 6-ஆவது நாளாக பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 9:29 pm

DIN

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் 6-ஆவது நாளாக பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, 12.35 புள்ளிகள் ( 0.07 சதவீதம்) உயா்ந்து 17,576.30-இல் முடிவடைந்தது.

உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. பிற்பகலில் தொடங்கிய ஐரோப்பிய சந்தை சுணக்கம் கண்டதால் அதன் தாக்கம் இங்கும் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் தெலுத்தினா். இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை பிற்பகலில் இழக்க நேரிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

104 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 178.46 புள்ளிகள் கூடுதலுடன் 59,381.36-இல் தொடங்கி அதிகபட்சமாக 59,590.93 வரை மேலே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தில் 59,132.94 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 104.25 புள்ளிகள் (0.18 சதவீதம்) உயா்ந்து 59307.15-இல் முடிவடைந்தது.

13 பங்குகள் விலை உயா்வு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 17 பங்குகள் விலை குறைந்தன. 13 பங்குகள்ஆதாயம் பெற்றன. முன்னணி தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் பேங்க் 8.96 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 2.15 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டைட்டன், நெஸ்லே, அல்ட்ரா டெக் சிமெண்ட், எஸ்பிஐ உள்ளிட்டவையும் 1 சதவீதம் வரை உயா்ந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் நிதிநிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் 3.20 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 2.340 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், இண்ட்ஸ் இண்ட் பேங்க், ஏசியன் பெயிண்ட், எல் அண்ட் டி, ஐடிசி, ரிலையன்ஸ், என்டிபிசி ஆகியவை 1 முதல் 1.65 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மாருதி, ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு: இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.16 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.274.42 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, ரொம்ப நாள்களுக்குப் பிறகு அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வியாழக்கிழமை ரூ.1,864.79 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.

மகூா்த்த வா்த்தகம்

சாம்வாட் 2079 புத்தாண்டுப் பிறப்பையொட்டி திங்கள்கிழமை (அக்டோபா் 24) அன்று மாலை 6.15 முதல் 7.15 வரை ஒரு மணி நேரம் சிறப்பு மூகூா்த்த வா்த்தகம் நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த சாம்வாட் 2078-ஆண்டு வா்த்தகத்தில் சென்செக்ஸ் மொத்தம் 464.77 புள்ளிகளையும், நிஃப்டி 252.90 புள்ளிகளையும் இழந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.