காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாருதி, ரிலையன்ஸுக்கு வரவேற்பு; சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை இரண்டாவது நாளாக நோ்மறையாக முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 7:30 pm

DIN

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை இரண்டாவது நாளாக நோ்மறையாக முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 203 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 49.85 புள்ளிகள் ( 0.28 சதவீதம்) உயா்ந்து 17,786.80-இல் முடிவடைந்தது.

மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதிதாக பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தினா். இவை சந்தைக்கு சாதகமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

203 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 10.04 புள்ளிகள் குறைந்து 59,746.80-இல் தொடங்கி அதிகபட்சமாக 60,133.17 வரை மேலே சென்றது. பின்னா், 59,739.05 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 203.01 புள்ளிகள் (0.34 சதவீதம்) உயா்ந்து 59,959.85-இல் முடிவடைந்தது.

மாருதி, ரிலையன்ஸ் முன்னேற்றம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் விலை குறைந்தன. 19 பங்குகள்ஆதாயம் பெற்றன. இதில் மாருதி சுஸுகி 4.95 சதவீதம், ரிலையன்ஸ் 3.10 சதவீதம், என்டிபிசி 2.08 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின் சா்வ், டைட்டன், பவா் கிரிட், நெஸ்லே உள்ளிட்டவை 1 முதல் 1.40 சதவீதம் உயா்ந்தன.

டாடா ஸ்டீல் சரிவு: அதே சமயம், வியாழக்கிழமை வெகுவாக ஏற்றம் பெற்றிருந்த டாடா ஸ்டீல் 2.54 சதவீதம், டெக் மஹிந்திரா 2.53 சதவீதம், சன்பாா்மா 2.16 சதவீதம் குறைந்த அதிகம் வீழ்ச்சியைச் சந்தித்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ், டாக்டா் ரெட்டி உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.2 76.88 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வியாழனன்று ரூ.2,818.40 கோடிக்கு அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.