‘ஐபோன் 14’ அறிமுகம்: ரூ. 79 ஆயிரம் முதல் ரூ. 1.39 லட்சம் வரை..

உலகளவில் ஐபோன் பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐபோன் 14 மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘ஐபோன் 14’ அறிமுகம்: ரூ. 79 ஆயிரம் முதல் ரூ. 1.39 லட்சம் வரை..
Published on
Updated on
1 min read

உலகளவில் ஐபோன் பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐபோன் 14 மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியால் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ‘ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 14 சிறப்பம்சங்கள்

  • ஏ15 பயோனிக் சிப் ப்ராசசர்
  • ஐபி68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்
  • 12எம்பி+12எம்.பி பின்பக்க கேமிரா, 12 எம்பி முன்பக்க கேமிரா
  • 6.1 இன்ச் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே
  • விபத்து அறிவிப்பு வசதி
  • எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதி
  • ஆரம்ப விலை ரூ. 79,000

ஐபோன் 14 ப்ளஸ் மாடலில் ஐபோன் 14-இல் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடுதலாக 6.7 இன்ச் டிஸ்பிளேவுடன் வெளியாகிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 89,900

ஐபோன் 14 ப்ரோ சிறப்பம்சங்கள்

  • ஏ16 பயோனிக் சிப் ப்ராசசர்
  • ஐபி68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப்
  • 48எம்பி+12எம்.பி அல்ட்ரா வைட் டெலிபோட்டோ பின்பக்க கேமிரா, 12 எம்பி ட்ரூடெப்த் முன்பக்க கேமிரா
  • 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளே
  • விபத்து அறிவிப்பு வசதி
  • எமெர்ஜென்சி எஸ்ஓஎஸ் வசதி
  • 30 நிமிடத்தில் 50 சதவிகிதம் சார்ஜ்
  • 1 டிபி சேமிப்பு வசதி
  • ஆரம்ப விலை ரூ. 1,29,000

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலில் ஐபோன் 14 ப்ரோவில் உள்ள அனைத்து வசதிகளுடன் கூடுதலாக 6.7 இன்ச் டிஸ்பிளேவுடன் வெளியாகிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 1,39,900.

இந்த மாடல்கள் அனைத்தும் நாளைமுதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், செப்டம்பர் 16 முதல் சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com