பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

பங்குச் சந்தையில் தடுமாற்றம்: சென்செக்ஸ் 224 புள்ளிகள் சரிவு

தொடர்ந்து கடந்த நான்கு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை புதன்கிழமை தடுமாற்றம் கண்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 224.11 புள்ளிகளை இழந்தது.

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 10:46 pm

 நமது நிருபர்

தொடர்ந்து கடந்த நான்கு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை புதன்கிழமை தடுமாற்றம் கண்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 224.11 புள்ளிகளை இழந்தது.
வல்லரசான அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்த அளவை விட அதிகரித்துள்ளது. இதனால், வங்கி வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படும் என்ற தகவல், உலகளவில் பல்வேறு நாடுகளின் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. காலையில் கடும் சரிவுடன் தொடங்கிய சந்தை, வங்கி, நிதிநிறுவனப் பங்குகளுக்கு கிடைத்த நல்ல வரவேற்பால், பின்னர் ஓரளவு மீட்சி பெற்றது. இருப்பினும், ஐடி, ஆயில் அண்ட் காஸ், பார்மா நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. இதையடுத்து, நான்கு நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சென்செக்ஸ் சரிவு: காலையில் 1,153.96 புள்ளிகள் குறைந்து பலவீனமாகத் தொடங்கிய சென்செக்ஸ் அதற்கு கீழே செல்லவில்லை. பின்னர் அதிகபட்சமாக 60,649.04 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 224.11 புள்ளிகளை (0.37 சதவீதம்) இழந்து 60,346.97-இல் நிலைபெற்றது. பின்னர் அதிகபட்சமாக 60,635.28 புள்ளிகள் வரை உயர்ந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
இதில் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், விப்ரோ உள்ளிட்டவை 1.50 முதல் 4.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. எல் அண்ட் டி 1.83 சதவீதம், ரிலையன்ஸ் 1.23 சதவீதம் குறைந்தன. அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க் 4.44 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்ததாக பவர் கிரிட், என்டிபிசி, எஸ்பிஐ ஆகியவை 2.30 முதல் 2.50 சதவீதம் உயர்ந்தன. கோட்டக் பேங்க், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின் சர்வ்,
எச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை உயர்ந்தன.
சந்தை மூலதன மதிப்பு ரூ.68 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.285.95 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாயன்று ரூ.1,956.98 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
தேசிய பங்குச் சந்தையில் 298.90 புள்ளிகள் குறைந்து 17,771.15-இல் தொடங்கிய நிஃப்டி, அதற்கு கீழே செல்லவில்லை. பின்னர், அதிகபட்சமாக 18,091.55 வரை உயர்ந்த நிஃப்டி, இறுதியில் 66.30 புள்ளிகளை(0.37 சதவீதம்) இழந்து 18,003.75-இல் முடிவடைந்தது.


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.