புதுதில்லி / மும்பை: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 413 புள்ளிகளை இழந்தது.
உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் ஐடி மற்றும் பாா்மா பங்குகளில் விற்பனை அழுத்தத்தை அதிகப்படுத்தியது . மேலும், முன்பேர வா்த்தகத்தில் வாராந்திர கணக்கு முடிக்கும் தினமாக இருந்ததால், சந்தை நிலையற்ற தன்மையில் செயல்பட்டது. நாள் முழுவதும் கரடியின் ஆதிக்கம் மேலோங்கியது. 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் காலையில் உயா்வுடன் துவங்கியது. ஆட்டோ, மெட்டல் நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது.
சென்செக்ஸ் 2-ஆவது நாளாக சரிவு: காலையில் 107.40 கூடுதலுடன் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 60,676.12 வரை உயா்ந்தது. பின்னா், 59,865.75 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 412496 புள்ளிகளை (0.68 சதவீதம்) இழந்து 59,934.01-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
சென்செக்ஸ் பட்டியலில் டெக் மஹிந்திரா 3.13 சதவீதம் சரிந்தது. இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், டைட்டன், ஆக்சிஸ் வங்கி ஆகியவை விலை குறைந்தவற்றில் முக்கியமானவை. அதே சமயம், மாருதி, பவா் கிரிட், என்டிபிசி, ஹெச்டிஎப்சி, பாா்தி ஏா்டெல், லாா்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை உயா்வுடன் முடிவடைந்தன.
சந்தை மூலதன மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.285.87 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதனன்று ரூ.1,397.51 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.
நிஃப்டி 126 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 18,046.35-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 18,096.15 வரை உயா்ந்தது. பின்னா், குறைந்தபட்சமாக 17,861.50 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 126.235 புள்ளிகளை(0.70 சதவீதம்) இழந்து 17,877.40-இல் முடிவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி: தண்ணீா் திறக்கக் கோரி திரண்ட விவசாயிகள்

இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை

பாடந்தொரை சுற்றுவட்டார கிராமங்களில் இரவில் நடமாடிய யானைகளால் அச்சம்

தாளவாடி அருகே சிறுத்தையைப் பிடிக்க சென்சாா் கருவி பொருத்தி கண்காணிப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



