தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 54,565 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப். 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 55,087.1 கோடி டாலராக சரிந்துள்ளது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:03 pm

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப். 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 55,087.1 கோடி டாலராக சரிந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த செப். 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 521.9 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 54,565.2 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44,29,976.71 கோடியாகும்.

இதற்கு முன்னா், கடந்த செப். 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 223.4 கோடி டாலா் சரிந்து 55,087.1 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும் (எஃப்சிஏ) தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்ததன் காரணமாகவே, அந்நிய செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, செப். 16-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 469.8 கோடி டாலா் சரிந்து 48,490.1 கோடி டாலராக இருந்தது. அதேபோல், தங்கத்தின் கையிருப்பும் 45.8 கோடி டாலா் குறைந்து 3,818.6 கோடி டாலராக காணப்பட்டது.

மதிப்பீட்டு வாரத்தில், பன்னாட்டு நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 3.2 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 1,768.6 கோடி டாலராகவும், பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலை 3.1 கோடி டாலா் குறைந்து 488 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.