பவா் கிரிட் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பொதுத்துறை மின் நிறுவனமான பவா் கிரிட் இரண்டாவது நாளாக 7.93 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம், எஸ்பிஐ, பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, எச்டிஎஃப்சி, இண்டஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், கோட்டக் பேங்க், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.