இளைஞர்களுக்காக இன்ஸ்டாகிராமில் புதிய வசதி அறிமுகம்!

இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயனர்கள் சிறப்பாக நிர்வகிக்க உதவுவதற்காக 'டேக் எ பிரேக்' என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இளைஞர்களுக்காக இன்ஸ்டாகிராமில் புதிய வசதி அறிமுகம்!

இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயனர்கள் சிறப்பாக நிர்வகிக்க உதவுவதற்காக 'டேக் எ பிரேக்' என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம், பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

அந்தவகையில் தற்போது 'டேக் எ பிரேக்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பயன்படுத்தும்போது இடைவெளி எடுப்பதை உறுதி செய்யும். 

'டேக் எ பிரேக்' ஆப்ஷனை 'ஆன்' செய்துவைக்கும்பட்சத்தில் அதில் 30, 20, 10 நிமிடங்கள் என ஆப்ஷன் இருக்கும். அதில் எதையேனும் தேர்வு செய்யலாம். 

இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும்போது நீங்கள் தேர்வு செய்த குறிப்பிட்ட நேர இடைவெளியில் 'டேக் எ பிரேக்' என திரையில் காட்டும். இது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என எச்சரிக்கை செய்யும். 

மேலும், 'மூச்சை இழுத்துவிடுங்கள், உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்கள், உங்களுக்குப் பிடித்த பாடலை கேளுங்கள், நீங்கள் செய்ய திட்டமிட்டதை செய்யுங்கள்' என அறிவுறுத்தும். 

'இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்கவும்  இளைஞர்கள் பல மணி நேரங்கள் இடைவெளியின்றி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதால் அவர்களின் நலன் கருதி இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் மேலாளர் நடாஷா ஜோக் தெரிவித்தார். 

'டேக் எ பிரேக்' அம்சம் அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது உலக அளவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

தற்போது ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த அம்சம், ஒரு சில வாரங்களில் ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்க உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com