முன்பு கூகுள், ஆப்பிள் இப்போ அமேசான்! 53 லட்சம் அபராதம் விதித்தது ரஷியா

அமேசான் நிறுவனத்திற்கு 53 லட்சம் (4 மில்லியன்) அபராதம் விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்பு கூகுள், ஆப்பிள், இப்போ அமேசான்! 53 லட்சம் அபராதம் விதித்தது ரஷியா
முன்பு கூகுள், ஆப்பிள், இப்போ அமேசான்! 53 லட்சம் அபராதம் விதித்தது ரஷியா
Published on
Updated on
1 min read


அமேசான் நிறுவனத்திற்கு 53 லட்சம் (4 மில்லியன்) அபராதம் விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் மற்றும் தற்கொலை பிரசாரம் உள்ளிட்டவை தொடர்பான விற்பனைகளை நீக்காததால், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணையவழி வணிக நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ளது.  

ஏராளமான மக்கள் அமேசான் மூலமாக பொருள்களை வீட்டில் இருந்தபடியே தேர்வு செய்து வாங்குகின்றனர். இந்நிலையில், சட்டவிரோதமான சிலவற்றை நீக்காததால், அமேசான் நிறுவனத்துக்கு ரஷிய அரசு அபராதம் விதித்துள்ளது. 

போதைப்பொருள் மற்றும் தற்கொலை பிரசாரம் செய்யும் பொருட்டு சில விற்பனை விளம்பரங்களை அமேசான் நீக்காததால், ரஷிய நீதிமன்றம் இந்திய ரூபாய் மதிப்பில் 53 லட்சம் (ரஷிய நாணய மதிப்பில் 4 மில்லியன்) அபராதம் விதித்துள்ளது. 

இதற்கு முன்பு பயங்கரவாத செயலிகளாக அறிவிக்கப்பட்டு மெட்டா நிறுவனத்தின் முகநூல் பயன்பாட்டிற்கு ரஷிய அரசு தடை விதித்திருந்தது. மேலும், கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கும் ரஷிய அரசு இதற்கு முன்பு அபராதங்களை விதித்துள்ளது. அந்தவகையில் தற்போது அமேசான் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com