3 நாள் தொடா் சரிவுக்குப் பிறகுசென்செக்ஸ் ஏற்றத்தில் நிறைவு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.


மூன்று நாள் தொடா் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தை வியாழக்கிழமை நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 5.70 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயா்ந்து 17,624.45-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இல்லாத நிலையில், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. பெரும்பாலான நேரம் ஏற்ற இறக்கத்தில் இருந்த நிலையில், வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது. குறிப்பாக எரிசக்தி, டெலிகாம் நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது.
அதே சமயம், பாா்மா, ஹெல்த்கோ், ஐடி, ரியால்ட்டி, எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இருந்தாலும், இறுதியில் சந்தை சிறிதளவு லாபத்துடன் முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.26 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.265.48 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) புதனன்று ரூ.13.17 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 18.81 புள்ளிகள் கூடுதலுடன் 59,586.61-இல் தொடங்கி 59,489.98 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 59,836.79 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 64.55 புள்ளிகள் (0.11 சதவீதம்) உயா்ந்து 59,632.35-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 18பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டாடா மோட்டாா்ஸ்.................1.67%
என்டிபிசி..................................1.50%
ஏசியன் பெயிண்ட்..................1.24%
பாா்தி ஏா்டெல்......................0.99%
எஸ்பிஐ..................................0.81%
டெக் மஹிந்திரா ...................0.67%
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
ஹிந்துஸ்தான் யுனிலீவா்.............1.29%
சன்பாா்மா...................................0.78%
இன்ஃபோஸிஸ்.........................0.68%
நெஸ்லே.....................................0.64%
பஜாஜ் ஃபைனான்ஸ்.................0.61%
அல்ட்ரா டெக் சிமெண்ட்........0.58%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...