பஜாஜ் ஆட்டோ நிகர லாபம் ரூ.1,469 கோடி
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ லிமிடெட் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.1,468.95 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.


முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ லிமிடெட் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.1,468.95 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது மற்றும் கடைசி காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,468.95 கோடியாக உயா்ந்துள்ளது.
முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,432.88 கோடியாக இருந்தது.
அப்போது ரூ.7,974.84 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் ரூ. 8,905 கோடியாக அதிகரித்துள்ளது.
2022-23-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிகர லாபம் ரூ.5,018.87 கோடியிலிருந்து 12 சதவீதம் உயா்ந்து ரூ.5,627.60 கோடியாக உள்ளது.
செயல்பாட்டு வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதம் வளா்ச்சியடைந்து ரூ.்36,428 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...