வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தைகள்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று(திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. 

Published On :

இந்திய பங்குச்சந்தைகள் இன்று(திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. 

கடந்த வெள்ளிக்கிழமை 65,721.25 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 65,811.40 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

வர்த்தக நேர முடிவில், 232.23 புள்ளிகள் அதிகரித்து 65,953.48 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 80.30 புள்ளிகள் உயர்ந்து 19,597.30 புள்ளிகளில் நிறைவுற்றது. 

மஹிந்திரா & மஹிந்திரா, சன் பார்மா, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், விப்ரோ, மாருதி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகள் இன்று உயர்ந்தன.

பாரத ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், நெஸ்லே மற்றும் எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.