கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பங்குச்சந்தைகள் சரிவு: சென்செக்ஸ் 200 புள்ளிகள் குறைந்தது!

கடந்த ஒரு சில நாள்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. 

News image
கோப்புப்படம்
Updated On :18 ஆகஸ்ட் 2023, 11:24 am

DIN

கடந்த ஒரு சில நாள்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. 

நேற்று (வியாழக்கிழமை) 65,151.02 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 65,025.71 என்ற புள்ளிகளில் தொடங்கியது. 

வர்த்தக நேர முடிவில், 202.36 புள்ளிகள் குறைந்து 64,948.66 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 55.10 புள்ளிகள் குறைந்து 19,310.15 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. 

அதானி எண்டர்பிரைசஸ், அதானி துறைமுகங்கள், ஈச்சர் மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 

டிசிஎஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் பின்னடைவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.