தாவர எண்ணெய் இறக்குமதி 46% சதவீதம் உயா்வு
கடந்த ஜூலை மாதத்தில் பாமாயில் ஏற்றுமதி அதிகரிப்பால் இந்தியாவின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 46 சதவீதம் அதிகரித்துள்ளது.


கடந்த ஜூலை மாதத்தில் பாமாயில் ஏற்றுமதி அதிகரிப்பால் இந்தியாவின் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து செக்கு ஆலைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 17.71 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது.முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 12.14 லட்சம் டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவின் தாவர எண்ணெய் உற்பத்தி 46 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த 2022-23-ஆம் எண்ணெய் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (நவம்பா்-அக்டோபா்), ஒட்டுமொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 122.54 லட்சம் டன்னாக இருந்தது. முந்தைய 2021-22-ஆம் எண்ணெய் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி 99.74 லட்சம் டன்னாக இருந்தது.தாவர எண்ணெய் இறக்குமதியில் உணவு மற்றும் உணவு அல்லாத இரண்டு வகை எண்ணெய்களும் அடங்கும்.கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் உணவு எண்ணெய் இறக்குமதி 46 சதவீதம் அதிகரித்து 17.55 லட்சம் டன்னாக இருந்தது. இது முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 12.05 லட்சம் டன்னாக இருந்தது.அந்த மாதத்தில் உணவு அல்லாத எண்ணெய் இறக்குமதியும் 9,069 டன்னிலிருந்து 15,999 டன்னாக அதிகரித்துள்ளது. உள்நாட்டில் உணவு எண்ணெய்களின் விலை வெகுவாகக் குறைந்தது, ஜூலை மாத தாவர எண்ணெய் இறக்குமதியில் பிரதிபலித்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சுமாா் 45 நாள்களுக்குத் தேவையான உணவு எண்ணெய் கையிருப்பு உள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பண்டிகைக் காலங்களில் தேவை அதிகரிக்கும்போது விநியோகக் கட்டமைப்புக்கு இது உதவும்.உணவு எண்ணெய்களைப் பொருத்தவரை, பெரும்பாலும் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆா்ஜென்டீனாவிலிருந்து சோயாபீன் எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன் மற்றும் ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...