கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்! இன்றைய நிலவரம்...

பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2023, 5:58 am

DIN

பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

நேற்று(புதன்கிழமை) 65,433.30 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் இன்று 65,722.51 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. 

இன்று காலை 11.15 நிலவரப்படி சென்செக்ஸ் 148.88 புள்ளிகள் அதிகரித்து 65,582.18 புள்ளிகளில் வர்த்தகம் பெற்று வருகிறது.வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை உயர்ந்தது. 

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 39.65 புள்ளிகள் உயர்ந்து 19,483.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.  

அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், மற்றும் யுபிஎல் ஆகிய பங்குகள் இன்று பேரணியில் முன்னணியில் இருந்தன.

அதானி போர்ட்ஸ், அதானி என்டர்பிரைசஸ், பவர் கிரிட், எல்&டி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமென்ட், இண்டஸ்இண்ட் வங்கி, பிபிசிஎல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. 

என்டிபிசி, ஜிவ் பைனான்சியல் சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.