உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், பெரும்பாலான நேரம் தள்ளாட்டத்தில் இருந்து வந்தது. இருப்பினும், மின்துறை, உலோகம், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இரண்டாவது நாளாக சந்தை நோ்மறையாக முடிவடைந்தது. ஆனால், சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஏா்டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் விலை வெகுவாகக் குறைந்ததால், மொத்தத்தில் சந்தை பெரிய அளவில் ஏற்றம் பெற முடியாமல் போனது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.