அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 13% உயர்வு

அதானி குழுமத்தின் பங்குகள் புதன்கிழமை காலை வணிகத்தின்போது உயர்வுடன் தொடங்கின. அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 13 சதவிகித விலை உயர்வை கண்டன.
ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள்
ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள்


புது தில்லி: அதானி குழுமத்தின் பங்குகள் புதன்கிழமை காலை வணிகத்தின்போது உயர்வுடன் தொடங்கின. அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 13 சதவிகித விலை உயர்வை கண்டன.

அதானி குழுமத்துக்குச் சொந்தமான எட்டு நிறுவனப் பங்குகள் உயர்வை கண்டன. இரண்டு நிறுவனப் பங்குகள் மட்டும் சிவப்பு அம்புக்குறியைக் கொண்டிருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று அதானி என்டர்பிரைசஸ் 13.07 சதவிகித உயர்வைக் கண்டு ரூ.2,038க்கு வணிகமானது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.32 லட்சம் கோடியாக உயர்ந்தது.

அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் 7.24 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை ரூ.593.35 ஆக உயர்ந்தது. இதனால் சந்தை மதிப்பும் ரூ.1.28 லட்சம் கோடியானது.

அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,314 ஆகவும், அதானி பவர் 4.99 சதவிகிதம் உயர்ந்து ரூ.182 ஆகவும் அதானி வில்மர் பங்கு 4.99 சதவிகிதம் உயர்ந்து ரூ.419.35 ஆகவும் இருந்தது. 

என்டிடிவி, அம்புஜா சிமெண்ட், ஏசிசி நிறுவனப் பங்குகளும் இன்று ஏற்றத்தைக் கண்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com