சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மொத்த விலை பணவீக்கம் 4.73%-ஆக சரிவு

கடந்த மாதம் மொத்த விலை பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) 4.73 சதவீதமாக குறைந்தது. தொடா்ந்து 8-ஆவது மாதமாக இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :14 பிப்ரவரி 2023, 7:31 pm

DIN

கடந்த மாதம் மொத்த விலை பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) 4.73 சதவீதமாக குறைந்தது. தொடா்ந்து 8-ஆவது மாதமாக இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு டிசம்பரில் மொத்த விலை பணவீக்கம் 4.95 சதவீதமாக இருந்தது. இது கடந்த மாதம் 4.73 சதவீதமாக சரிந்தது.

ஜனவரியில் மொத்த விலை பணவீக்கம் குறைந்ததற்கு தாது எண்ணெய்கள், ரசாயனம் மற்றும் ரசாயன பொருள்கள், ஜவுளி, கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பங்களித்துள்ளன.

டிசம்பரில் எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் 18.09 சதவீதமாக இருந்தது. இது ஜனவரியில் 15.15 சதவீதமாக குறைந்தது.

டிசம்பரில் உற்பத்திப் பொருள்கள் பணவீக்கம் 3.37 சதவீதமாக இருந்தது. இது ஜனவரியில் 2.99 சதவீதமாக குறைந்தது.

உணவுப் பொருள்கள் பணவீக்கம் டிசம்பரில் -1.25 சதவீதமாக இருந்த நிலையில், அது ஜனவரியில் 2.38 சதவீதமாக அதிகரித்தது.

ஜனவரியில் காய்கறிகள் பணவீக்கம் -26.48 சதவீதம், தானியங்கள் பணவீக்கம் 2.41 சதவீதம், எண்ணெய் வித்துகள் பணவீக்கம் -4.22 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.