பங்குச் சந்தையில் "கரடி' திடீர் ஆதிக்கம்: 637 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை புதன்கிழமை கரடியின் திடீர் ஆதிக்கத்தால் எதிர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 637 புள்ளிகளை
பங்குச் சந்தையில் "கரடி' திடீர் ஆதிக்கம்: 637 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்
Updated on
1 min read

இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த பங்குச் சந்தை புதன்கிழமை கரடியின் திடீர் ஆதிக்கத்தால் எதிர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 637 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 189.60 புள்ளிகள் (1.04 சதவீதம்) குறைந்து 18042.95-இல் நிலைபெற்றது.
 அமெரிக்க சந்தைகள் செவ்வாய்க்கிழமை எதிர்மறையாக முடிந்திருந்தன. அமெரிக்க ஃபெடரல் மார்க்கெட் கமிட்டியின் கூட்ட முடிவுக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். இதனால், புதிதாக பங்குகள் வாங்குவதை தவிர்த்தனர். மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது முதலீட்டாளர்களின் உணர்வுகளை பெரிதும் பாதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. மேலும், மார்க்கெட்டில் அதிகத் திறன் கொண்ட ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் கடும் விற்பனையை எதிர்கொண்டதே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சென்செக்ஸ் சரிவு: காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 61,294.65-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 61,327.21 வரை மேலே சென்றது. பின்னர், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 60,593.56 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 636.75 புள்ளிகள் (1.04 சதவீதம்) குறைந்து 60,657.45-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் மாருதி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டிசிஎஸ் ஆகிய 3 பங்குகள் மட்டுமே சிறிதளவுஆதாயம் பெற்றன. மற்ற 27 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
 டாடா ஸ்டீல் சரிவு: கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த டாடா ஸ்டீல் 2.32 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ் ஆகியவை 2.10 சதவீதம் குறைந்தன. மேலும், விப்ரோ, இன்ஃபோஸிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், ஐடிசி, எஸ்பிஐ, பஜாஜ் ஃபின் சர்வ், எம் அண்ட் எம், நெஸ்லே உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன.
 சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.2.91 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் 281.75 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.628.07 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com