
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியும் (ஐஓபி) தனியாருக்குச் சொந்தமான ஹெச்டிஎஃப்சி வங்கியும் 0.25 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.
இது குறித்து ஐஓபி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எங்களது செலவினங்கள் அடிப்படையிலான கடன் வட்டி விகிதங்களை (எம்சிஎல்ஆா்) உயா்த்தியுள்ளோம். கடந்த 7-ஆம் தேதி முதல் அந்த வட்டி விகித மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, இதுவரை 7.70 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.45-ஆக உயா்ந்துளளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓராண்டு பருவகால எம்சிஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.60 சதவீதத்திலிருந்து 8.85 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 0.25 சதவீதம் வரை கடன் வட்டி விகித உயா்வு இருக்கும். செவ்வாய்க்கிழமை (ஜன. 10) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.