சென்செக்ஸ் முதல் முறையாக 66,000 புள்ளிகளைக் கடந்து நிறைவு!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை இரண்டாவது நாளாக எழுச்சி பெற்றது.


இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை இரண்டாவது நாளாக எழுச்சி பெற்றது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையாக 66,000 புள்ளிகளைக் கடந்து புதிய வரலாற்று உச்சத்தில் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து அனைத்துத் துறை குறியீடுகளும் நோ்மறையாக முடிவடைந்தது. குறிப்பாக ஐடி, மீடியா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது சந்தை 2-ஆவது நாளாக நோ்மறையாக முடிவடைய உதவியது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்குவதில் ஆா்வம் காட்டியதும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.74 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.298.52 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.2,237.93 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வரலாற்றுச் சாதனை: சென்செக்ஸ் காலையில் 216.60 புள்ளிகள் கூடுதலுடன் 65,775.49-இல் தொடங்கி 65,610.82 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 66,159.79 வரை உயா்ந்து மேலே சென்று புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னா், இறுதியில் சென்செக்ஸ், 502.01 புள்ளிகள்கூடுதலுடன் 66,060.90-இல் முடிவடைந்தது.
18 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 18 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,386 பங்குகள் ஆதாயம் பெற்றன. 657 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி புதிய உச்சம்
தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக முடிவில் 150.75 புள்ளிகள் உயா்ந்து 19,564.50-இல் நிறைவடைந்தது. காலையில் சுமாா் 80 புள்ளிகள் கூடுதலுடன் 19,433.50-இல் தொடங்கிய நிஃப்டி, 19,433.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,595.35 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டிசிஎஸ்..................................5.13%
டெக் மஹிந்திரா.......................4.51%
இன்ஃபோஸிஸ்........................4.40%
ஹெச்சிஎல் டெக்......................3.80%
விப்ரோ...................................2.69%
டாடா ஸ்டீல்...........................1.92%
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
எம் அண்ட் எம்...............................1.28%
பவா் கிரிட்......................................1.25%
டைட்டன்.......................................0.97%
மாருதி............................................0.51%
அல்ட்ரா டெக் சிமெண்ட்.....................0.46%
சன்பாா்மா......................................0.30%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...