தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஹாத்வே கேபிள் அண்டு டேட்டாகாம் நிகர லாபம் உயர்வு!

ஹாத்வே கேபிள் அண்டு டேட்டாகாம் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 6.62 சதவீதம் அதிகரித்து ரூ.22.36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

News image

hathway

Updated On :17 ஜூலை 2023, 1:43 pm

DIN

புதுதில்லி: ஹாத்வே கேபிள் அண்டு டேட்டாகாம் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 6.62 சதவீதம் அதிகரித்து ரூ.22.36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஹாத்வே கேபிள் அண்டு டேட்டாகாம் நிறுவனம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ரூ.20.97 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.447.18 கோடியிலிருந்து 11.63 சதவீதம் அதிகரித்து ரூ.499.23 கோடியானது.

2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஹாத்வே கேபிளின் மொத்த செலவுகள் 13.85 சதவீதம் அதிகரித்து ரூ.513.85 கோடியாக இருந்தது.

ஜூன் காலாண்டில் அதன் மொத்த வருமானம் 14.75 சதவீதம் அதிகரித்து ரூ.533.37 கோடியாக இருந்தது.

ஹாத்வே கேபிள் அண்டு டேட்டாகாம் லிமிடெட் பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் 3.4 சதவீதம் அதிகரித்து ரூ.15.80 ஆக நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.