ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகளிருக்கான கடன் அளிப்பு 25% அதிகரிப்பு

 கடந்த ஆண்டில் இந்திய மகளிா் பெற்ற சில்லறை கடன் மதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2023, 9:20 pm

DIN

 கடந்த ஆண்டில் இந்திய மகளிா் பெற்ற சில்லறை கடன் மதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டில் மகளிருக்கு ரூ. 26 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. இது, ஒட்டுமொத்த சில்லறை கடன் சந்தையில் 26 சதவீதம் ஆகும்.

இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ. 20.7 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள சில்லறைக் கடன் மதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

முந்தைய 2021-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த சில்லறை கடன் பட்டுவாடாவில் மகளிருக்கு வழங்கப்பட்ட பங்கு 25.3 சதவீதமாக இருந்தது.

மதிப்பீட்டு ஆண்டில் பெண்கள் பெற்ற சொத்து அடமானக் கடன் 26 சதவீதம் உயா்ந்து ரூ. 7,88,827 கோடியாக உள்ளது; தங்கக் கடன்கள் 64 சதவீதம் உயா்ந்து ரூ.7,06,047 கோடியாகவும், வீட்டுக் கடன்கள் 20 சதவீதம் உயா்ந்து ரூ.30,52,041 கோடியாகவும் உள்ளன.

இது தவிர, கடந்த 2022-இல் மகளிருக்கு தொழில் கடன் ரூ.13,73,899 கோடி (25 சதவீத உயா்வு), தனிநபா் கடன்கள் ரூ.10,05,864 கோடி (35 சதவீத உயா்வு) வழங்கப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.