8 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை சரிவு

கடந்த 8 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை சரிவைச் சந்தித்தது.
8 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை சரிவு
Updated on
1 min read

கடந்த 8 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை சரிவைச் சந்தித்தது.
 இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 161 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 57.80 புள்ளிகள் (0.32 சதவீதம்) குறைந்து 18,089.85-இல் நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இதைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தை எதிர்மறையாக தொடங்கியது. ஐடி, மெட்டல், பிஎஸ்யு பேங்க், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. குறிப்பாக மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட அதிகத் திறன் கொண்ட பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன.
 மேலும், அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுக்காகவும் முதலீட்டாளர்கள் காத்திருந்ததாலும் சந்தை வலுவிழந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாயன்று ரூ.1,997.35 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 79.75 புள்ளிகள் குறைந்து 61,274.96-இல் தொடங்கி அதற்கு மேலே செல்லவில்லை.
 பின்னர், 61,024.96 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 161.41 புள்ளிகள் (0.26 சதவீதம்) குறைந்து 61,193.30-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 11 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 965 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,068 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 32 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com