இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை எழுச்சியில் தொடங்கிய பங்குச்சந்தை இறுதியில் பெரியளவில் மாற்றமின்றி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3 புள்ளிகள் குறைந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 1.55 புள்ளிகள் (0.01 சதவீதம்) உயர்ந்து 18,265.95-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், நேரம் செல்லச் செல்ல லாபப் பதிவு அதிகரித்ததைத் தொடர்ந்து சந்தை தள்ளாட்டம் கண்டது. இறுதியில் பெரிய அளவில் மாற்றமின்றி முடிவடைந்தது.
இதனால், காலையில் பெற்ற லாபம் அனைத்தையும் பிற்பகல் வர்த்தகத்தில் இழக்க நேரிட்டது. ஆட்டோ, ஃபார்மா, ஐடி, ஹெல்த்கேர் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. ஆனால், வங்கி, நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி நிறுவனப் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.22 ஆயிரம் கோடி உயர்ந்து ரூ.276.28 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) வெள்ளிக்கிழமை ரூ. 2,123.76 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 115.43 புள்ளிகள் கூடுதலுடன் 61,879.68-இல் தொடங்கி அதிகபட்சமாக 62,027.51 வரை மேலே சென்றது.
பின்னர், 61,654.94 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 2.92 புள்ளிகள் குறைந்து 61,761.33-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 18 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன.
இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் 867 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,176 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 25பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினராக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!

பிரதமரை உணவருந்த அழைத்த திரிணமூல் காங்கிரஸ்!
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


