சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,780-க்கும், ஒரு பவுன் ரூ.46,240-க்கும் விற்பனையாகி வருகின்றது.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ. 46,960-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5,870-க்கு விற்பனையாகிறது.
இதன்மூலம், சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதேபோல், வெள்ளியின் விலை இன்று 70 சாசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 82.20-ஆகவும் ஒரு கிலோ ரூ.82,200-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.