

கடந்த இரண்டு நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை வியாழக்கிழமை தள்ளாட்டம் கண்டு இறுதியில் சரிவுடன் முடிந்தது.
இதனால், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 65 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், டிசிஎஸ் காலாண்டு முடிவுகள் சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யாததால், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ உள்பட முன்னணி ஐடி பங்குகள் விலை வெகுவாகக் குறைந்தன. இதைத் தொடா்ந்து சந்தை சரிவைச் சந்தித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.322.08 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த புதன்கிழமை ரூ.421.77 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 91.52 புள்ளிகள் கூடுதலுடன் 66,564.57-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 66,577.60 வரை மேலே சென்றது. பின்னா், 66,339.42 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 64.66 புள்ளிகள் (0.10 சதவீதம்) குறைந்து 66,408.39-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,792 பங்குகளில் 2,227 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,555 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 120 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.
16 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 16 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,234 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 856 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 17 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில்11.35 புள்ளிகள் கூடுதலுடன் 19,822.7000-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,843.30 வரை மேலே சென்றது. பின்னா், 19,772.65 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 17.35 புள்ளிகள் (0.09சதவீதம்) குறைந்து 19,794.00-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
மாருதி.........................................1.60%
என்டிபிசி.....................................1.36%
பவா் கிரிட்...................................1.18%
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்.....................0.82%
ஹெச்டிஎஃப்சி பேங்க்......................0.73%
டாடா ஸ்டீல்................................0.72%
சரிவைக் கண்ட பங்குகள்
டெக் மஹிந்திரா...........................2.72%
இன்ஃபோஸிஸ்............................1.95%
டிசிஎஸ்.......................................1.88%
ஹெச்சிஎல் டெக்...........................1.74%
பஜாஜ் ஃபைனான்ஸ்......................1.04%
விப்ரோட.....................................1.95%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.