5-ஆவது நாளாக கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் 523 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதன்கிழமையும் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து,
பங்குச்சந்தை
பங்குச்சந்தை
Updated on
1 min read

பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதன்கிழமையும் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து,  மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 523 புள்ளிகளை இழந்தது. இதனால், சந்தை மதிப்பு ரூ.2.09 லட்சம் கோடி குறைந்தது.
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் தாக்கம் உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. இந்த நிலையில்,  உள்நாட்டுச் சந்தை தொடர்ந்து 5-ஆது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.  மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் தவிர்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. 
சந்தை மதிப்பு சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.09 லட்சம் கோடி குறைந்து  வர்த்தக நேர முடிவில் ரூ.309.22 லட்சம் கோடியாக இருந்தது.  இதற்கிடையே,  அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திங்கள்கிழமை ரூ.4,236.60 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்செக்ஸ் 5-ஆவது நாளாக வீழ்ச்சி:  காலையில் 47.39 புள்ளிகள் கூடுதலுடன்  64,619.27-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 64,787.08 வரை மேலே சென்றது. பின்னர்,  63,912.16 வரை கீழே சென்ற  
சென்செக்ஸ்,  இறுதியில்522.82 புள்ளிகளை (0.81 சதவீதம்) இழந்து  64,049.06-இல்  முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,795  பங்குகளில் 1,140 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,551 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 104 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
24 பங்குகள் விலை சரிவு:  சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. மற்ற 24 பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 593 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,506 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.  நிஃப்டி பட்டியலில் 10 பங்குகள் மட்டுமே 
ஆதாயம் பெற்றன. 40 பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
நிஃப்டி 160 புள்ளிகள் இழப்பு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 4.70 புள்ளிகள் கூடுதலுடன் 19,286.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,347.30 வரை மேலே சென்றது. பின்னர், 19,074.15 வரை கீழே சென்ற நிஃப்டி,  இறுதியில் 159.60 புள்ளிகளை (0.83 சதவீதம்)  இழந்து 19,122.15-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்
டாடா ஸ்டீல்    1.13%
எஸ்பிஐ    0.60%
மாருதி    0.44%
எம் அண்ட் எம்    0.32%
நெஸ்லே    0.24%
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்    0.05%
சரிவைக் கண்ட  பங்குகள்
இன்ஃபோசிஸ்    2.76%
பார்தி ஏர்டெல்    1.83%
என்டிபிசி    1.82%
இண்டஸ்இண்ட் வங்கி    1.78%
ஐசிஐசிஐ வங்கி    1.47%
டாடா மோட்டார்ஸ்    1.47%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com