அசோக் லேலண்ட் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 10 சதவிகிதம் அதிகரிப்பு!
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்து 15 ஆயிரத்து 576 ஆக உள்ளது.


புதுதில்லி: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்து 15 ஆயிரத்து 576 ஆக உள்ளது.
இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 14,121 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் மொத்த உள்நாட்டு விற்பனை 13,301-லிருந்து 14,545-ஆக இருந்தது. இது 9 சதவிகித வளர்ச்சியாகும் என்று அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகன விற்பனை 2022 ஆகஸ்டில் 7,671 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது 17 சதவிகிதம் அதிகரித்து 9,013 ஆக இருந்தது.
இருப்பினும், உள்நாட்டு சந்தையில் இலகுரக வணிக வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 5,630-லிருந்து 2 சதவிகிதம் குறைந்து 5,532-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...