கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பங்குச்சந்தை: 28 நிறுவன பங்குகள் உயர்வு!

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவடைந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :11 செப்டம்பர் 2023, 11:11 am

DIN

மும்பை பங்குச்சந்தை பட்டியலிலுள்ள 30 நிறுவன பங்குகளில் 28 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் நிறைவடைந்தன.

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் 528.17 புள்ளிகள் உயர்ந்து 67,127.08 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இதுவரை இல்லாத உச்சமாக 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது. 

இந்நிலையில், பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்கள் ஏற்றம் கண்டன. அதிகபட்சமாக பவர் கிரிட் 2.18 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆக்சிஸ் வங்கி 1.99 சதவிகிதமும், மாருதி சுசூகி 1.95 சதவிகிதமும், எச்சிஎல் டெக் 1.49 சதவிகிதமும், எஸ்பிஐ 1.38 சதவிகிதமும் உயர்வுடன் காணப்பட்டன. 

அதற்கடுத்த இடங்களை டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், என்டிபிஎசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டிசிஎஸ், விப்ரோ, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன.

குறைந்தபட்சமாக இந்தஸ்இந்த் வங்கி 0.16 சதவிகிதமும், டெக் மஹிந்திரா 0.22 சதவிகிதமும் டைட்டன் கம்பெனி 0.42 சதவிகிதமும் உயர்ந்திருந்தன.

பஜாஜ் பைனான்ஸ், எல்&டி ஆகிய இரு நிறுவனங்களின் பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்துள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.