ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 56,21,455-ஆக உயா்வு

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 56,21,455-ஆக உயா்வு

புது தில்லி: இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் மொத்த விற்பனை கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 56,21,455-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நிதியாண்டில் நிறுவனம் 56,21,455 இரு சக்கர வாகனங்களை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 5.5 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 53,28,546-ஆக இருந்தது.

2022-23-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 54,20,532-ஆக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 51,55,793-ஆக இருந்தது.

அதே போல், 2022-23-இல் 1,72,753-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 2,00,923-ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் நிறுவனத்தின் மொத்த விற்பனை முந்தைய 2023 மாா்ச்சுடன் (5,19,342) ஒப்பிடுகையில் 4,90,415-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com