வரி விலக்குப் பெற 80சி பிரிவு மட்டும்தானா என்ன? வரியைக் குறைக்கும் பல வழிகள்!

பழைய வரி முறையில் 80சி பிரிவின் வரம்பு குறித்து அறிய வேண்டும்
பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?
பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?
Published on
Updated on
2 min read

2024 - 2025ஆம் நிதியாண்டு துவங்கியிருக்கிறது. பலரும் தாங்கள் செலுத்த வேண்டிய வரியைக் குறைக்க என்னெக்க வழிமுறைகள் இரக்கிறது என்று ஆராயத் தொடங்கியிருப்பார்கள்.

பொதுவாக இருக்கும் 80சி பிரிவையும் தாண்டி, பழைய வரி விதிப்பு முறையில் இருக்கும் வரிப் பிடித்தங்களை அறிந்துகொள்வதால், பலரும் நினைத்ததை செய்ய முடியும்.

அதாவது, வழக்கமாக 80சி பிரிவின் கீழ் இருக்கும் பிடித்தங்கள் மூலம் குறிப்பிட்ட முதலீடு மற்றும் செலவினங்களைக் காட்டி ரூ.1.5 லட்சம் வரை பயன்பெறலாம் என்பதையும் தாண்டி, பழைய வரி விதிப்பு முறையில் இருக்கும் பல்வேறு முக்கியம்சங்களை அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?
என்ன கொடுமை? கிளாம்பாக்கத்தால் ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இது குறித்து பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறும் தகவலில், வரி செலுத்துவோர், வீட்டுக் கடன், கல்விக் கடனுக்கான வட்டிக்கும், நன்கொடைகளுக்கும் வரிச் சலுகைப் பெறலாம். கூடுதலாக, வீட்டு வாடகைப் படிகள், விடுமுறைக் கால பயணப் படிகளுக்கும் கூடுதலாக வரிச் சலுகைப் பெறும் வழிமுறை உள்ளது என்கிறார்கள்.

ஒருதனிநபர், வீட்டுக்கடனுக்கு செலுத்தும் வட்டி மற்றும் கல்விக் கடனுக்கான வட்டியின் மூலம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகைப் பெற முடியுமாம்.

ஒருவேளை, வரிச் சலுகைக்கான 80சி விரிவின் உச்ச வரம்பான ரூ.1.5 லட்சத்தை வரி செலுத்துவோர் எட்டிவிட்டால், வருமான வரிச் சட்டம் ஆறாவது பிரிவின்படி, ஏனைய வரிச் சலுகைகளைப் பெறமுடியும்.

பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?
குஜராத்தில் ஓயாத க்ஷத்ரிய பிரச்னை: ஆட்டம் காண்கிறதா, பாஜக கோட்டை?

இதில், மருத்துவக் காப்பீட்டு சலுகையை பிரிவு 80டி மூலம் பெறலாம், அதுபோல, 80சிசிசிடி பிரிவின் கீழ், தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு பணம் செலுத்துவதன் மூலம் வரிச் சலுகை பெறலாம். மேலும், வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு 80இஇ பிரிவின் கீழும் சலுகைப் பெற முடியும், அதேவேளையில், சேமிப்புக் கணக்குகளிலிருந்து வரும் வட்டி வருவாய்க்கு 80டிடிஏ பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது, கல்விக் கடனுக்கும் சில வரிச் சலுகைகள் உள்ளன. ஆண்டுதோறும் மருத்துவக் காப்பீடு செலுத்தும் தொகைக்கு அதிகபட்சமாக ஒரு தனிநபர் ரூ.25 ஆயிரம் வரை வரிச் சலுகை பெற முடியும். கூடுதலாக முன்கூட்டியே உடல்பரிசோதனைக்கு செலவிடும் தொகைக்கும் 80டி பிரிவின் கீழ் ரூ.5 ஆயிரம் வரை வரிச்சலுகை பெறலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் 80சிசிடி(1பி) பிரிவின் கீழ் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை வரிச்சலுகைப் பெற முடியுமாம். இது 80சிசிடி(1) பிரிவின் கீழ் பெறும் ரூ.1.50 லட்சம் சலுகையைத் தவிர்த்து கூடுதல் சலுகையாக இருக்கும்.

80இஇ பிரிவானது, குடியிருப்பு வீட்டு, சொத்துக் கடன்களுக்கான வட்டிக்கு வருமான வரிச்சலுகையை வழங்குகிறது. இது ஒரு நிதியாண்டில் ரூ.50 ஆயிரம் வரை வரி விலக்குகளை பெற வழிவகை செய்கிறது.

80டிடிஏ பிரிவின் கீழ், ஒருவர், வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், அஞ்சலகங்களின் சேமிப்புக் கணக்குகளிலிருந்து பெறப்படும் வட்டிக்கு ரூ.10 ஆயிரம் வரை வரிச் சலுகைப் பெறலாம். ஆனால், நிலையான வைப்புத் தொகை அல்லது தொடர் வைப்புத் தொகையிலிருந்து பெறப்படும் வட்டிகளுக்கு இந்த விலக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.