டாடா மோட்டாா்ஸ் விற்பனை 90,822-ஆக உயா்வு

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 90,822-ஆக உயா்வு

புது தில்லி: கடந்த மாா்ச்சில் டாடா மோட்டாா்ஸின் மொத்த உள்நாட்டு விற்பனை 90,822-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனம் இந்தியாவில் 90,822 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 89,351-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 2 சதவீதம் உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் மின்சாரக் காா்கள் உள்ளிட்ட நிறுவன பயணிகள் வாகனங்களின் மொத்த உள்நாட்டு விற்பனை 44,225-லிருந்து 14 சதவீதம் வளா்ச்சியடைந்து 50,297-ஆக உள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவன வா்த்தக வாகனங்களின் விற்பனை 45,307-லிருந்து 10 சதவீதம் குறைந்து 40,712-ஆக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 9,31,957-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த கடந்த 2023-23-ஆம் நிதியாண்டில் 2 சதவீதம் உயா்ந்து 9.49,015-ஆக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com